சனி, 13 செப்டம்பர், 2008

ஏற்றுக் கொள்வாயா?

அன்பே தலைசாய்க்க நினைக்கிறேன்
தலைசாய்க்க முடியவில்லை
துயில் கொள்ள நினைக்கிறேன்
துயில் கொள்ள முடியவில்லை
தவறு என்னுடையது தான்
திருத்தி கொள்ள வேண்டியதும் நான்தான்
ஆனாலும் ஏற்றுகொள்ள முடியவில்லை
இவ்வளவு பெரிய தண்டனை
தேவையா எனக்கு?
சாந்தமாக சொன்னாய்
சாந்தமானேன்
கட்டுப்படுத்திட சொன்னாய்
கட்டுப்படுத்தினேன்
கோபம் கொண்டாய்
உணர்வாய் பழகினாய்
தவறுகளை திருத்தினாய்
எனக்கு கற்று கொடுத்தாய்
முடிவுகளை சொன்னாய்
எனக்கு தோள் கொடுத்தாய்
என்னை தாங்கினாய்
என் வலியை உன் வலியாக்கினாய்
உன் நட்பை, தோழமையை,
பாசத்தை, அன்பை எனக்களித்தாய்
என்னை மனிதனாக்கினாய்
ஆனாலும் தவறு என்னுடையதுதானே
உன் வலியை உன் காயத்தை
கேட்க்கவே இல்லை
உன்னை நான் பேசவே விடவில்லை
உனக்கு வலியை தந்தேன்
காயத்தை உருவாக்கினேன்
காயம் ஆறவில்லையா?
வலிகளும் தீரவில்லையா?
அதனால் தானா தொடர்பே கூடாது என்றாய்
உன் சிக்கல்களும் பிரச்சினைகளும்
எனக்கு புரிகிறது அது அத்தனையும்
நான் தாங்கி கொள்கிறேன்
உன் நட்பு தோழமை
பாசம் நேசம் மிக பெரிது
நீ என் மேல் கொண்டிருக்கும் பொய் கோபம்
என்னை கலங்கடிக்கிறது
சோர்வுறவைக்கிறது
திணறவைக்கிறது
திண்டாடவைக்கிறது
சோதிக்காதே
ஏனோ தனியாக கைப்பேசியில் பேசுகிறாய்
உணர்வோடு அழுகிறாய்
நான் பார்த்தால் மறைக்கிறாய்
ஏன் உனக்கு இவ்வளவு வலிகள்?
நான் தாங்கி கொள்கிறேன்
நான் உன்னை ஏற்று கொள்கிறேன்
நான் உன்னுடன் வாழ விரும்புகிறேன்
நீ ஏற்றுக்கொள்வாயா?