செவ்வாய், 24 பிப்ரவரி, 2009

புரியவும் முடியவில்லையடி

இதயம் கனக்கிறது
நெஞ்சு வலிக்கிறது
மனசு இறக்கிறது
மரணிக்க விடு
மனிதனாக வாழ ஆசைப்பட்டேன்
மனிதனாக்கினாய்
உணர்வுடனே பேசினேன்
உன்மத்தம் ஆகினேன்
உன்னுடனே பேசினேன்
உன்னுள்ளே வாழ்ந்தேன்
உன்னுள்ளே வாழ்கிறேன்
மறைக்கதான் பார்க்கிறாய்
மறைக்கவும் முடியாமல்
வெளிக்காட்டவும் முடியாமல்
ஏன் இத்தனை வலிகள் உனக்கு
புரிந்துகொள்ளாமல் இல்லை
எனக்காக ஏன் துடிக்கிறாய்
எனக்காக ஏன் அழுகிறாய்
கொட்டிவிடு எல்லாவற்றையும்
இதற்குமேலும் பொறுமை வேண்டாம்
உள்ளிருப்பதை வெளிக்காட்ட
ஏன் இத்தனை தயக்கம்
புரியவும் முடியவில்லையடி
அத்தனையும் உணர்வுகளே
உணர்வுகளை வெளிக்காட்டு
உண்மைகள் புரியுமடி
உண்மைகள் புரிந்தால்
பொய்மைகள் விலகுமடி
பொய்மைகள் விலகினால்
அன்புதான் பெருகுமடி
அன்புதான் பெருகினால்
இடைவெளி குறையுமடி
இடைவெளி குறைந்தால்
வலிகள் தீருமடி
வலிகள் தீர்ந்துவிட்டால்
வாழ்க்கை நம்வசமாகுமடி

திங்கள், 23 பிப்ரவரி, 2009

தமிழருவிமணியன்

சமீபகாலமாய் நான் கவனித்து வரும் அரசியல்வாதிகளுள் நியாயமானவர், சிறந்தபேச்சாளர், எழுத்தாளர், தன் கருதுக்களை திறம்பட எடுத்து வைப்பதில் மிகவும் திறமைசாலி, பத்திரிகை பேட்டிகளில் நறுக்பதிலை தருவதில் கில்லாடி, காந்தியவாதி என்று சொல்லிகொண்டாலும் பெரியாரின் மேல் அதிக பற்று கொண்டவர்.
இலங்கை தமிழர் பிரச்சினைக்காக தன் பொதுசெயலாளர் பதவியை காங்கிரஸ் கட்சியில் இருந்து துறந்து கட்சியை விட்டு வெளியேறினார். இவர் பேசிய குறுந்தகடுகள் கீழேஉள்ள முகவரியில் கிடைக்கிறது அதில் 12 தேசிய தலைவர்களை பற்றி பேசியது இன்றைய இளைஞர்கள் கட்டாயமாக கேட்க வேண்டியது.
இவரை பற்றி அதிக தகவல் தெரிந்தால் என் மின்னஞ்சல்(theanthuli@gmail.com) முகவரிக்கு தெரிவிக்கவும்.

முகவரி:
Prem audios,
267, Aruljothi Nagarm
palladam - 641466,
Coimbatore dist,
Phone: 04255-255433.