சனி, 17 ஏப்ரல், 2010

மனித மிருகங்களுக்கு என் கடுமையான கண்டனங்கள்

மனிதாபிமான முறையில் மருத்துவம் பார்க்க வந்த வயதான மூதாட்டி மனிதாபிமானம் இல்லாத மிருகங்களால் வானூர்தி நிலையத்திலிருந்து திருப்பி அனுப்ப பட்டிருக்கிறார்.
விளம்பரத்தை விரும்பும் இந்த மனித மிருகங்களுக்கு என் கடுமையான கண்டனங்கள்.

வியாழன், 17 செப்டம்பர், 2009

தமிழருவிமணியனின் காந்திய அரசியல் இயக்கம் தொடக்க விழா அழைபிதழ்

அன்புடன்,
நான்.

வியாழன், 13 ஆகஸ்ட், 2009

திருமணம் செய்து கொள்ளாத இளைஞர் ஒருவரின் புலம்பல்

திருமணம் செய்து கொள்ளாத இளைஞர் ஒருவரின் புலம்பல் இது, நண்பர் ஒருவர் மின்னஞ்சலில் அனுப்பிஇருந்தார். எழுதியவர் யாரென்பது தெரியவில்லை ஆனால் நன்றாக எழுதிஇருக்கிறார். அந்த முகம் தெரியாதவருக்கு வாழ்த்துகள்!

எண்சாண் உடம்பில் வயிறே பிரதானம். சிரசே பிரதானம் என்பதெல்லாம் சும்மா. வயிறு தான் முக்கியம். நாம் எல்லோரும் உழைப்பது (ஏமாற்றுவது, திருடுவது, கொள்ளை அடிப்பது, பிச்சை எடுப்பது என எதைச் செய்தாலும் அது) சாப்பாட்டுக்குத்தான். தத்துவம் சொல்வது மாதிரி இருந்தாலும் உண்மை அதுதானே. சென்னையில் பேச்சுலராய் தனியாய் சுற்றும் போது தான் (ஜாலியாய் அல்ல, சாப்பாட்டுக்காக ஹோட்டல் ஹோட்டலாய் சுற்றுவது) முன்பு ஊரில் செய்த அட்டகாசங்கள் எல்லாம் மனசில் வந்து மனசாட்சியைக் குத்தும்.

சிறுவயதில், வீட்டில் எவ்வளவு கஷ்டம் இருந்த போதும், பணப் பிரச்னை இருந்த போதும் சாப்பாட்டுக்கு மட்டும் எந்தக் கவலையும் இருப்பதே கிடையாது. பதினைந்து ரூபாய் பொன்னி அரிசிதான் சாப்பாட்டுக்கு (அப்போதெல்லாம் அது விலை மிக அதிகம், இப்போதைய நாற்பது ரூபாய் அரிசிக்குச் சமம்). வேளா வேளைக்கு வக்கனையாக ருசியாக தட்டில் வந்து விழுந்து விடும். அதனால்தானோ என்னவோ கஷ்டமான சூழ்நிலைகளை மட்டும் என்றுமே உணர்ந்ததில்லை. ஸ்கூல், வீடு, காலேஜ் என்று சந்தோஷமாக இருந்தாயிற்று.

டிபன் என்ன? உப்புமாவா? உப்புமாவை எவன் திம்பான்... உப்புமா இல்லடா, கார தோசை. கார தோசையா? கார தோசையை எவன் திம்பான்... என்று திமிரெடுத்துச் சுற்றிய காலம் அது. தட்டில் போட்ட சாப்பாட்டை, எனக்கு பிடிக்காது, சாப்பிட மாட்டேன் என்று விசிறி அடிக்கும் அளவுக்கெல்லாம் அராஜகம் செய்ததில்லை என்றாலும் முனகிக் கொண்டே சாப்பிடுவது, அடம் பிடிப்பது எனச் செய்வதுண்டு. எப்படித்தான் ஞாபகம் வைத்திருப்பார்களோ தெரியாது அதற்குப் பிறகு அந்தந்த டிஷ்களை செய்யவே மாட்டார்கள். கார்த்திக்கு இது பிடிக்காது, பப்பிக்கு அது பிடிக்காது என்று மனப்பாடமாக இருக்கும் அம்மாவுக்கு.

பிடித்த டிஷ்ஷூம் வேண்டும், ருசியாகவும் இருக்க வேண்டும், நேரத்துக்கு கிடைக்க வேண்டும் என்று தின்ற நாக்கு இப்போது நல்ல சோறு கிடைக்காதா என்று அலைகிறது. உண்மையில் சொல்ல வேண்டுமென்றால் தட்டில் சாப்பாடு போட்டு சாம்பார், ரசம் ஊற்றி அப்பளத்துடன் பொரியல் போட்டுத்தின்பது எப்படி என்று மறந்தே போய்விட்டது. வீட்டில் இருக்கும் போது சாப்பிடாது விட்ட உப்புமா வகையறாக்கள் எல்லாம் அமிர்தம் என்று சோத்துக்கு அலையும் போதுதான் மனதில் உறைக்கிறது. கஷ்டத்திலும் நன்றாக சாப்பிட்டோம். ஆனால், நன்றாக சம்பாதிக்கும் போது சாப்பிட முடியவில்லை. (இதாண்ணே வாழ்க்கை)

அதுவும் சென்னை வந்த புதிதில் (நான் - வெஜ் பழகாதவர்களுக்கு ரொம்பக் கஷ்டம்) ஒன்றுமே செய்ய முடியாது. கிடைத்ததைத் தின்பது என்பார்களே அது தான் கதை. அதுவும் வேலை நிமித்தம் அகால நேரத்தில் ஆபீஸிலோ, மழையிலோ மாட்டிக் கொண்டால் போச்சு, அவ்வளவுதான். அன்றைய சாப்பாட்டில் மண் தான். பட்டினி அல்லது மண் மாதிரி இருக்கும் எதையாவது தான் தின்றாக வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டே வேளை.
இதில் சாப்பிடுவது உடம்புக்கு கெடுதல் இல்லாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். (கூட இருக்கும் எவனுக்காவது அல்சர் வந்து தொலையும், அம்மை போடும், டயரியா வரும், இல்லாவிட்டால் சாப்பிட்டது சேரவில்லை என்று எவனாவது ஒருத்தன் சொரிந்து கொண்டே இருப்பான்) பர்ஸூக்கும் கெடுதல் வரக் கூடாது. நல்ல ஹோட்டலையும் கண்டுபிடிக்க வேண்டும். எத்தனை பிரச்னை.

அது மட்டுமல்ல... எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா என்பது போல எத்தனை வகை ஹோட்டல் வைத்தாய் இறைவா என்று அவனைக் கைகூப்பி வணங்கலாம். கையேந்தி பவன், தள்ளு வண்டி, ரோட்டுக் கடை, த்ரீ ஸ்டார், ஃபைவ் ஸ்டார், பிரியாணி ஹோட்டல், ஐயர் மெஸ், ஆந்திரா மெஸ், கொல்கத்தா மெஸ், சைனீஸ், இத்தாலியன், தந்தூரி, கான்டினென்டல், தாலி ஹவுஸ், போஜன்சாலா, இந்திய உணவுக் கழகம், போஸ்ட் ஆபீஸ் கேன்டீன், முனியாண்டி விலாஸ், தலப்பா கட்டு, அஞ்சப்பர், சரவண பவன், பஞ்சாபி தாபா என்று எத்தனை வகை. ஆனால் எதிலுமே ரெகுலராகச் சாப்பிட முடியாது. காசு முதல் குவாலிட்டி வரை பல காரணிகள்.

எந்த ஹோட்டலிலும் கிச்சனை மட்டும் எட்டிப் பார்த்து விடக் கூடாது. பார்த்தால் சாப்பிட முடியாது. 'என்னடா டேய்... ஹோட்டலில் கிடைக்காத ருசியா? வெரைட்டியா? அதைப்போய் இப்படிப் பழிக்கிறாயே' என்று சொல்லும் வீட்டுச் சாப்பாடு சாப்பிடும் அன்பர்களே, குறைந்த பட்சம் ஒரு வாரத்திற்கு தொடர்ச்சியாக மூன்று வேளை ஹோட்டல்கள் மாற்றி மாற்றி சாப்பிட்டுப் பாருங்கள். அப்போது தெரியும் உங்களுக்கு. கிடைப்பதைச் சாப்பிட்டு விட்டு ஃபுரூட் ஜூஸ், லெமன் ஜூஸ், வாழைப்பழம், மோர், பெப்ஸி, சோடா என எதையாவது உள்ளே தள்ளி சாப்பிட்ட அயிட்டத்தை செரிக்க வைக்க வேண்டும். கூடவே உடம்பு சூடாகாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். சனிக்கிழமை எண்ணெய் தேய்த்து உடம்பை ஊற வைப்பது என்ற கதையே இங்கு நடக்காது. ஆபீஸ் இருக்கும், அல்லது அன்றைக்குத்தான் மீட்டிங்கோ, க்ளையண்ட் அப்பாயிண்ட்மென்டோ இருக்கும்.

கண்டதைச் சாப்பிட்டு விட்டு உடம்புக்கு எதாவது, குறிப்பாக வெயில் வியாதிகள் (அம்மை, டயரியா, உட்காருமிடத்தில் கட்டி, மெட்ராஸ் ஐ, முகத்தில் கொப்புளங்கள் அல்லது வீக்கம் போன்றவை) வந்து தொலைத்தால் காலி. அவ்வளவு தான். ஆபீஸூக்கு போனைப் போட்டு சிக் லீவ் சொல்லிவிட்டு, முனகிக் கொண்டே ஊருக்கு ரயிலேற வேண்டியது தான். அதனால் பார்த்துச் சாப்பிட வேண்டும்.

அதிலும் ஹோட்டல்களில் இந்த டிப்ஸ் கருமம் வேறு.டிப்ஸ் வைக்கவில்லையென்றால் கெட்ட வார்த்தையிலேயே திட்டுகிறான்கள். வேளைக்கு மூன்று ரூபாய் டிப்ஸ் வைத்தாலும் ஆவரேஜாக மாதம் முந்நூறு ரூபாய் அதற்கே போகும். அநியாயமாக இல்லை..?
அந்த டிப்ஸ் பணத்தில் என்னென்ன செலவு செய்யலாம்? சத்யத்தில் ஜோடியாக ஒரு படம் பார்க்கலாம், அல்லது நல்லதாய் நாலு புத்தகம் வாங்கலாம், அல்லது பன்னிரண்டு லிட்டர் கூல்டிரிங்க் வாங்கலாம், அல்லது மூன்று டிரெயின் பாஸ் எடுக்கலாம், அல்லது இரண்டு பஸ் பாஸ் எடுக்கலாம், அல்லது 20 இங்கிலீஷ் பட டிவிடி வாங்கலாம், அல்லது சரவணா ஸ்டோர்ஸில் சீப்பாக ரெண்டு டி.ஷர்ட் எடுக்கலாம், அல்லது மாசக்கடைசியில் நாலு நாள் சிக்கனமாகச் சாப்பிட்டுச் சமாளிக்கலாம்.

வீட்டில் இருந்தால் வேளைக்கு 8 தோசை அல்லது 17 இட்லி அல்லது 10 சப்பாத்தி அல்லது 30 பணியாரம் அல்லது சாம்பார், குழம்பு, ரசம், தயிர், மோர், கூட்டு, கீரையோடு, ஒரு ஃபுல் அன்லிமிடெட் மீல்ஸ் சாப்பிடும் சாப்பிடும் வஞ்சனையில்லாத வயிறு எங்களுடையது. ஹோட்டலில் போய் உட்கார்ந்து தோசை வைக்கச் சொல்லி விட்டு விலையைக் கேட்டால் 25 ரூபாய் என்பான், அடுத்த தோசை சொல்ல மனம் வருமா உங்களுக்கு? சரவணா பவன் ஃபுல் மீல்ஸ் விலை என்ன தெரியுமா? 120 ரூபாய் மக்களே! நூத்தி இருபது ரூபாய். இப்படிச் சாப்பிட்டால் மத்தியானமும், ராத்திரியும் சாப்பிட காசு வேண்டாமா? கணக்குப் போட்டு லிமிட்டாகத் தான் தின்ன முடியும். மூன்று வேளைக்கும் இப்படித் தின்றால் எப்படி எடை போடுவது? பிப்டி கேஜி தாஜ்மஹால்தான் இன்னமும்.

செலவைக் குறைக்க வேண்டுமென்றால் ரூமில் சமையல் செய்து சாப்பிடலாமே? உடம்புக்கும் கெடுதல் இல்லையே என்று சொல்லும் அட்வைஸ் ஆறுமுகங்களே! வாங்கய்யா வாங்க, உங்களைத்தான் தேடிக் கொண்டிருக்கிறேன். கையில் சிக்கினால் அடுத்த வேளை சாப்பாட்டுக்கு நீங்கள் தான். நான் சொல்லும் கணக்கு வழக்குகளையெல்லாம் கொஞ்சம் பாருங்கள், பிறகு வருவீர்கள் அட்வைஸ் செய்ய...

முதலில் இதே செல்ஃப் குக்கிங் ஐடியாவுடன் நான்கைந்து பேர் சேர வேண்டும், பிறகு குறைந்தபட்சம் இரு அறைகள் உள்ள வீடு பார்க்க வேண்டும் (வீட்டு வாடகை, பத்து மாத அட்வான்ஸைக் கணக்கில் சேர்க்கவும்) மண்ணெண்ணெய் அடுப்பா, எலக்ட்ரிக் அடுப்பா, கேஸ் அடுப்பா என முடிவு செய்ய வேண்டும், கேஸ் தான் சரி என்றால் கேஸ் கனெக்ஷன் வாங்க வேண்டும். இரண்டு, மூன்று மாதங்களுக்கொருமுறை அட்டென்டன்ஸ் மாறும் ரூமில் யார் பெயரில் கேஸ் கனெக்ஷன் வாங்குவது?

இன்றிருப்பவன் மூன்று மாதம் கழித்து இருக்க மாட்டான். வேறு ஊருக்கோ, ஏன் வேறு நாட்டுக்கோ கூடப் போயிருப்பான். அரிசி, பருப்பு, மிளகாய், புளி போன்ற அத்தியாவசியப் பொருட்கள் தவிர மிக்ஸி, குக்கர், கிரைண்டர், வாணலி, பாத்திர பண்டங்கள் போன்ற மிகமிக இன்றியமையாத பொருட்களை வாங்கியாக வேண்டும். யார் கணக்கில், யார் பெயரில்? எல்லாவற்றுக்கும் மேல் யார் சமைப்பது? நைட் ஷிப்டு ஒருவன், ஈவினிங் ஷிப்டு ஒருவன், டே ஷிப்டு ஒருவன், வேலையே இல்லாமல் இன்னொருத்தன் என்றிருந்தால்?
அடுத்தது... யார் பாத்திரம் கழுவுவது, யார் உதவி செய்வது, எத்தனை பேருக்கான சமையல்? எத்தனை வேளைக்கு? இதையெல்லாம் கணக்குப் போட வேண்டும். அதற்கப்புறம் டேஸ்ட்டு? டேஸ்ட்டா? அப்படி என்றால்? இருக்கும்எல்லாவற்றையும் கொட்டிச்சமைத்து விட்டு வேலை முடிந்ததும் தான் புது டிஷ்ஷூக்கு பெயர் சூட்டுவிழாவே நடக்கும். சூடு ஆறும் முன் உள்ளே தள்ள வேண்டும். இல்லாவிட்டால் கஷ்டம்.

மாதம் பத்து நாள் வெளியூர் மீட்டிங் போகிறவன், பதினைந்து நாள் ஊருக்குப் போகிறவன், முப்பது நாளும் மூச்சு விடாமல் சாப்பிடுகிறவன் என்று வெரைட்டி காட்டும் கேரக்டர்கள் இருக்கும் அறையில் ஒவ்வொருவர் சாப்பிட்டநாள் கணக்குமாறினால், மாதம் முடிந்ததும் செலவை எப்படிப் பிரிப்பது? பிரணாப் முகர்ஜி பட்ஜெட் போட எடுத்துக் கொண்ட சிரத்தையை விட சற்று அதிகம் கவனம் தேவை இவற்றை கணக்குப் போட்டு சிக்கெடுக்க. கணக்குப் போடுவதற்குள் திக்கித் திணறி மூச்சுமுட்டிப் போகும். (இந்தக் கணக்கோடு சோப்பு, சீப்பு, பேஸ்டு, பர்ஃபூம், டாய்லெட் க்ளீனிங், ஷூ பாலீஸ், நியூஸ் பேப்பர், இத்யாதி, இத்யாதி காமன் செலவுக் கணக்குகளை கூட்டிக் கொள்ளல் வேண்டும்)

இந்தச் சாப்பாட்டில் சைவம் அசைவம் பிரச்சினை வேறு... சைவக்காரன் படுத்தும் பாடு தனியென்றால், அசைவக்காரன் செய்யும் அட்டகாசம் ஸ்பெஷல் வகை. அசைவத்தில் ஈரல் எனக்குப் பிடிக்காது, பீஃப் அவனுக்குப்பிடிக்காது, சிக்கன்சூடுஏற்றும், மீன் முள் தொண்டையில் குத்தும் என்று ஆயிரத்தெட்டு பிரச்னை வரும். சரி சைவமே தின்று தொலையலாம் என்றால் ஒரு முறை வெறும் ரசம் சாதமும், முட்டை பொறியலும் செய்ய முயற்சித்து ஆரம்பத்திலேயே கேஸ் காலி. பாதி வெந்தசோறுடன் குக்கரையும், அடித்து வைத்த முட்டையையும், கரைத்து வைத்த ரசம் கரைசலையும் தூக்கிக் கொண்டு எங்கே ஓட?

ஞாயிற்றுக்கிழமை மதியம் மூன்றரை மணிக்கு கேஸ் கிடைக்குமா? குறைந்த பட்சம் மண்ணெண்ணெய்? அப்படியே மண்ணெண்ணெய் கிடைத்தாலும் அடுப்பு கிடைக்குமா? அல்லது அக்கம் பக்கத்தில் குடும்பத்துடன் ஓய்வெடுக்கும் மக்களிடம் "மம்மீமீ... டாடீடீ.." என்று தட்டைத் தூக்கி..........

அந்த இளைஞர் முடிக்கவில்லை முடிவை நீங்களே முடிக்கவும்.
நன்றி!
அன்புடன்,
நான்.

திங்கள், 27 ஜூலை, 2009

பதிலை நீயே சொல்லிவிடு

மீண்டும் மீண்டும் காப்பாற்ற
துடிக்கிறது மனசு
சரியான பதில் உன்னிடம்
இருந்து இல்லை
ஒவ்வொரு முறையும் கவலை
கொள்கிறேன் நான்
சிக்கலான இடத்தில் சிக்கி இருக்கிறாய்
புரிகிறது எனக்கு
உன்னை வைத்து என்னை
சிக்க வைக்க நினைகின்றனர்
ஒருபோதும் ஒத்துகொள்ளமாட்டாயென
நினைக்கிறேன் நான்
இங்கே ஆடு நனைகிறது என்று
ஓநாய் அழுகிறது
ஓநாயை துரத்தியடிக்க மேய்ப்பனான
நான் தயார்
பதிலை நீயே சொல்லிவிடு
வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறேன்
மன்னித்து விடு என்னை
போதும் இந்த தண்டனை
வலிக்கிறது உனக்கும் எனக்கும்
உன்வலியை நானும்
உணர்ந்து கொள்கிறேன்
ஒவ்வொரு முறையும் கவலை
கொள்கிறேன் நான்
என்வலிகள் எனக்கு புதிதல்ல
உன்வலிகள் தான் என்னை
கலங்கடிக்கிறது
திரும்ப திரும்ப உனக்கு ஏன்
இத்தனை வலிகள்
இனிமேலும் தண்டனையா?
இல்லை அரவணைப்பா?
பதிலை நீயே சொல்லிவிடு

திங்கள், 18 மே, 2009

இனிமேலும் என்னை காயபடுத்தாதே

ஒவ்வொருமுறையும்
கவலைகொள்கிறேன் நான்
கண்டுகொள்ளவில்லை நீ
ஏன் இந்த மொவ்னம்,
ஏன் இந்த தயக்கம்,
ஏன் இந்த சலனம்,
ஏன் இந்த வருத்தம்,
உண்மையிலே கலக்கமா,
இல்லை என்மேல் கோபமா
இனிமேலும் வலிகளை சொல்லியழ
யாருமில்லை எனக்கு
நீ போதும் எனக்கு
புரிந்துகொள்வாயென நினைக்கிறேன்
புரியாதவளல்ல நீ
உண்மையிலே கலக்கமுறுகிறேன்
வருத்தமடைய வைக்கிறாய்
உன் உடல்நிலையை
நீயே கவனிக்காவிட்டால்
வேறு யார்தான் கவனிப்பார்
சரியாகசாப்பிடுவதில்லை நீ
தினம் தினம் வேலைசெய்தே
களைப்படைகிறாய்
பலமணிநேரம் வேலைசெய்கிறாய்
சிலமணிநேரமாவது ஒய்வெடு
நன்றாக சாப்பிடு
உன்வலிகளை தாங்கும் சக்தி
எனக்கிருக்கிறது
எதுவாயினும் என்னிடம் சொல்லிவிடு
இனிமேலும் என்னை காயபடுத்தாதே

அன்புடன்
நான்

சனி, 16 மே, 2009

அன்பைதருவாயடி

ஒருமுறை செய்த தவறுக்காக
பலமுறை ஏங்கி தவிக்கிறேன்
பலமுறை கேட்டேன் மன்னிப்பை
தவறு என்னுடையது தான்
தவறுவதும் மனித இயல்புதானே
இனிமேலும் கேட்பேன் மன்னிப்பை
ஆனாலும் ஏன்தான் அடம்கொள்கிறாய்
வலிக்கிறது மிகவும் வலிக்கிறது
சொல்லவும் எழுதவும் அளவுகோலில்லை
புரியமுடியும் உன்னால் மட்டும்தான்
ஆனாலும் அடம் கொள்கிறாய்
மன்னிப்பதும் மனிதகுணம் தானே
ஒருமுறை தவறியதற்க்கே இப்படியானால்
இனிமேலும் தவறிட மாட்டேன்
என்னை விடவும் அதிகமாய்
நீ காயமடைகிறாய்
புரிந்தும் உணர்ந்தும் விட்டேன்
ஆனாலும் உன்னால் என்னை
மறந்துவிடமுடியவில்லையடி
அருமையாய் நடித்து தான் பார்க்கிறாய்
என்னை வெறுப்பதாய்
அதிலும் உன்னால் என்னை
வெறுக்கமுடியவில்லையடி
உன் செயல்களும் உணர்வுகளும்
காட்டிகொடுக்கிறடி
உள்ளிருப்பதை வெளிக்காட்டிகொள்ள
உனக்கு ஏன் இந்த தயக்கமடி
வலிக்கிறதடி மிகவும் வலிக்கிறதடி
இனிமேலும் வலியை நிறுத்த
முன்வருவாயடி அன்பைதருவாயடி

வெள்ளி, 17 ஏப்ரல், 2009

உன் அன்பை எனக்கு உடனே காட்டிவிடு

சேர்ந்திருந்த பொழுதுகளைவிடவும்
இப்போது தான் அதிகமாய் உன்னை
நேசிக்கிறேன்
தனித்து விடப்பட்ட கோழிகுஞ்சாய்
அல்லலுகிறேன்
காதலின் மகத்துவம் இப்போதான்
அதிகமாய் புரிகிறது
உன் இழப்பு என்னை மிகவும்
காயப்படுத்திற்று
இனிமேலும் உன்னை இழக்க நான்
விரும்பவில்லை
என்னையே சுமந்தவள் இல்லாமல்
திண்டாடுகிறேன்
எப்போது என்னிடம் வருவாய்
என் காயங்களுக்கு மருந்திடுவாய்
எப்போது என்னை தேற்றுவாய்
எப்போது என்னை அரவணைப்பாய்
நான் செய்த குற்றத்திற்காக இனிமேலும்
தண்டனை வேண்டாம்
மீண்டும் மீண்டும் இழப்புகளை
சந்திக்க விரும்பவில்லை
இனிமேலும் இழப்புகளை சந்திக்கும்
சக்தி எனக்கில்லை
போதும் இந்த தண்டனை
உன் அன்பை எனக்கு உடனே காட்டிவிடு

ஞாயிறு, 1 மார்ச், 2009

அன்பே வாழ்த்துகளடி

வாழ்த்துகளடி அன்பே
கண்ணே கண்மணியே
அன்பே ஆருயீரே
நீ இன்று குழந்தையடி
ஆம் இன்று உனக்கு
பிறந்தநாளடி
வாழ்த்துகளடி
உனக்கு என் பிறந்தநாள்
வாழ்த்துகளடி
அன்புடனே வாழ்த்துகிறேன்
பண்புடனே வாழ்த்துகிறேன்
பாசமாய் வாழ்த்துகிறேன்
ஆதரவாய் வாழ்த்துகிறேன்
நட்புடனே வாழ்த்துகிறேன்
காதலாலே வாழ்த்துகிறேன்
நீ பல்லாண்டு பல்லாண்டு
பலநூறாண்டு நீடூடி வாழ
வாழ்த்துகிறேன்

செவ்வாய், 24 பிப்ரவரி, 2009

புரியவும் முடியவில்லையடி

இதயம் கனக்கிறது
நெஞ்சு வலிக்கிறது
மனசு இறக்கிறது
மரணிக்க விடு
மனிதனாக வாழ ஆசைப்பட்டேன்
மனிதனாக்கினாய்
உணர்வுடனே பேசினேன்
உன்மத்தம் ஆகினேன்
உன்னுடனே பேசினேன்
உன்னுள்ளே வாழ்ந்தேன்
உன்னுள்ளே வாழ்கிறேன்
மறைக்கதான் பார்க்கிறாய்
மறைக்கவும் முடியாமல்
வெளிக்காட்டவும் முடியாமல்
ஏன் இத்தனை வலிகள் உனக்கு
புரிந்துகொள்ளாமல் இல்லை
எனக்காக ஏன் துடிக்கிறாய்
எனக்காக ஏன் அழுகிறாய்
கொட்டிவிடு எல்லாவற்றையும்
இதற்குமேலும் பொறுமை வேண்டாம்
உள்ளிருப்பதை வெளிக்காட்ட
ஏன் இத்தனை தயக்கம்
புரியவும் முடியவில்லையடி
அத்தனையும் உணர்வுகளே
உணர்வுகளை வெளிக்காட்டு
உண்மைகள் புரியுமடி
உண்மைகள் புரிந்தால்
பொய்மைகள் விலகுமடி
பொய்மைகள் விலகினால்
அன்புதான் பெருகுமடி
அன்புதான் பெருகினால்
இடைவெளி குறையுமடி
இடைவெளி குறைந்தால்
வலிகள் தீருமடி
வலிகள் தீர்ந்துவிட்டால்
வாழ்க்கை நம்வசமாகுமடி

திங்கள், 23 பிப்ரவரி, 2009

தமிழருவிமணியன்

சமீபகாலமாய் நான் கவனித்து வரும் அரசியல்வாதிகளுள் நியாயமானவர், சிறந்தபேச்சாளர், எழுத்தாளர், தன் கருதுக்களை திறம்பட எடுத்து வைப்பதில் மிகவும் திறமைசாலி, பத்திரிகை பேட்டிகளில் நறுக்பதிலை தருவதில் கில்லாடி, காந்தியவாதி என்று சொல்லிகொண்டாலும் பெரியாரின் மேல் அதிக பற்று கொண்டவர்.
இலங்கை தமிழர் பிரச்சினைக்காக தன் பொதுசெயலாளர் பதவியை காங்கிரஸ் கட்சியில் இருந்து துறந்து கட்சியை விட்டு வெளியேறினார். இவர் பேசிய குறுந்தகடுகள் கீழேஉள்ள முகவரியில் கிடைக்கிறது அதில் 12 தேசிய தலைவர்களை பற்றி பேசியது இன்றைய இளைஞர்கள் கட்டாயமாக கேட்க வேண்டியது.
இவரை பற்றி அதிக தகவல் தெரிந்தால் என் மின்னஞ்சல்(theanthuli@gmail.com) முகவரிக்கு தெரிவிக்கவும்.

முகவரி:
Prem audios,
267, Aruljothi Nagarm
palladam - 641466,
Coimbatore dist,
Phone: 04255-255433.

புதன், 11 பிப்ரவரி, 2009

திரும்பிபார்த்தேன்

நடந்து வந்த பாதையை திரும்பிபார்த்தேன்
பாதசுவடுகளாய் அத்தனையும்
அதிக பாதசுவடுகள் உற்றுநோக்கினேன்
உன் என் பாதசுவடுகள் அருகருகே
சில இடங்களில் விரிசலும் அதிகமாய்
சிந்தித்து பார்த்தேன், உணர்ந்துகொண்டேன்
மன்னிப்பு கேட்டேன், இப்போதும் கேட்கிறேன்,
இனிமேலும் கேட்பேன்
மன்னித்து விடேன் வலிக்கிறது
போதும் இந்த தண்டனை
இதற்கு மேலும் வேண்டாம்
உன்னிடம் மட்டுமே இத்தனை
மன்னிப்பும் கேட்டேன்
இதற்குமேலும் தண்டிப்பதாய் இருந்தால்
தண்டித்துகொண்டே இரு
தண்டனையை அனுபவித்துக்கொண்டே இருக்கிறேன்

அன்புடன்
நான்

ஞாயிறு, 7 டிசம்பர், 2008

வெற்றியுடன் வாழ வாழ்த்துகிறேன்

எது சிறுபிள்ளைத்தனம்
முடிந்ததுபோல் தோன்றும் உறவுக்கு
முற்றுப்புள்ளி வைப்பதா?
இல்லை திரும்ப தொடங்க
நினைக்கும் உறவுக்கு
கால்புள்ளி வைப்பதா?
இல்லையே!
உன்னோடு இருந்த உறவுக்கு
பெயர் என்னவென்று வைத்தாய்
உன் உணர்வுகளை
புரிந்துகொள்ளாதவனல்ல நான்
உன்னை வெறுத்து ஒதுக்குபவனுமல்ல நான்
ஆனாலும் உன் அத்தனை செயல்பாடுகளும்
எனக்கு கேள்விக்குறியாய் தான்
கீழ்த்தரமான என் செயல்பாடுகளையும்
ஏற்று கொண்டவளல்லவா நீ
உன் பார்வையில் ஆயிரமாயிரம்
எண்ணங்கள் துடிப்புகள்
அத்தனையும் புரிந்துகொண்டவன் நான்
என்அன்பு, என்பாசம், என்நேசம்,
என்நட்பு, என்தோழமை, என்பரிவு
அத்தனையும் உன்னை
சுற்றியிருக்கும் எப்போதும்
தோல்விகளும் சறுக்கல்களும்
வாழ்க்கையின் படிக்கட்டுகள்
புரிந்துகொள்ளாதவல்ல நீ
தெரிந்துகொள்ளாதவளுமல்ல நீ
துவண்டு போகாதே எழு
வீறுகொண்டு எழு
துடிப்புடன் எழு
இடிமுழக்கத்துடன் எழு
உன்னை எதிர்ப்பவர்களை
எதிர்த்து நில் வெற்றி உனக்கே
உணர்வுகளை பகிர்ந்துகொள்
மகிழ்ச்சயுடன் வாழ்
மலரட்டும் நல்வாழ்க்கை
வெற்றியுடன் வாழ வாழ்த்துகிறேன்

புரியாத புதிராய்!

இங்கு விசமாகிபோகும்
மனிதர்களும் உண்டு
உணர்வுகளை புரிந்துகொள்ளாத
மனிதர்களும் உண்டு
உடுத்தியிருக்கும் உடையின்
உள்ளிருக்கும் பாகத்தை பார்க்க
துடிப்பவர்களும் உண்டு
சக மனிதனை தாக்கி அளிக்க
துடிப்பவர்களும் உண்டு
சக மனிதனின் உணர்வுகளை
கொச்சைபடுத்தும் மனிதர்களும் உண்டு
ஆறறிவு படைத்த மனிதனுக்குள்ளே
எத்தனை விதமான எண்ணங்கள்
ஐந்தறிவு படைத்த விலங்கினங்களுக்கு
இல்லாத அத்தனை குணமும் இங்கு
மனிதர்களுக்கு இருக்கிறது
அத்தனையும் வன்முறையா?
இல்லை குரூரமா?
புரியாத புதிராய்!

ஞாயிறு, 9 நவம்பர், 2008

ஏற்றுக்கொள்ளமுடியவில்லை

அன்பானவளே அறிவார்ந்தவளே
நன்றியுள்ளவளே நடுநாயகமானவளே
வலிகளும் வார்த்தைகளும்
சிலநேரங்களில் சுகமானது
அதே வலிகளும், வார்த்தைகளும்
சிலநேரங்களில் வலிமையானது,
கொடுரமானது, அர்த்தமானது,
எனக்கிருக்கும் வலியும்
இதே ரகங்கள் தான்
என்றாலும் என்னால்
ஏற்றுக்கொள்ளமுடியவில்லை
இந்த வலிகளின் காரணம்
புரிதல் இல்லையா
புரியவில்லை என்றாலும்
நீ சொன்ன காரணம்
என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை
என்னுள் எளும் எந்த கேள்விகளுக்கும்
உன்னால் தான் பதில் சொல்ல முடியும்
ஆனால் நான் உன்னிடம்
எந்த கேள்வியும் எழுப்பபோவதில்லை
உன்னோடு பேசிய கணங்களையும்
பேசிய பேச்சுகளையும்
அசைபோட்டு பார்க்கிறேன்
எத்தனை வலிகள், தேவையில்லாத பேச்சுகள்
நீ வலிகளுடன் சிரித்த சிரிப்புகள்
எனக்காக உருவாக்கிய கணங்கள்,
உற்சாகங்கள், தவிப்புகள்,
உதவிகள், உழைப்புகள்
சில பிரிவுகள் தவிர்க்கமுடியாதது
தனித்துவமானது அழகானது,
அறிவானது, அன்பானது, பண்பானது
ஆனால் உன் பிரிவு தவிக்கவைக்கிறது
ஏன் என்னை விட்டு பிரிந்தாய்
உன் பிரிவை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை
உன் முடிவு நல்ல முடிவு தான்
ஆனால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை
தவறுகளும், தவறுதல்களும்
இயல்பானதே என்னுடைய
தவறுகளும், தவறுதல்களும்
இயல்பானது தானே
உன் இடத்தில் இன்னொரு மனிதனை
நியமிக்க முடியவில்லை
ஏனென்றால் ஒப்பந்த கூலிகாரனல்ல நீ
உணர்வுபூர்வமான உறவு நீ
உன்னுடைய இடம் வெற்றிடமாகவே இருக்கும்
உன் வாழ்க்கை வெற்றிகரமாகவே இருக்கட்டும்.

அன்புடன்,
நான்.

புதன், 8 அக்டோபர், 2008

உனக்காக காத்திருக்கிறேன்

உனக்கும் எனக்குமான
உறவில் விரிசல்
தவிக்கிறேன், தவிக்கிறாய்
ஏன் என்பதன் காரணம்
சொல்ல மறுக்கிறாய்
தவிக்கவைக்கிறாய்
தொடர்பு கொள்ள கூடாது என்றாய்
நானும் நீயும் வாழ்ந்ததும்
வாழ்வதும் திரைப்படம் இல்லை
உண்மையான வாழ்க்கைதானே?
உன்னிடம் என் காதலை சொல்ல
நேரம் தவறியிருக்கலாம்
அதற்காகவா இந்த விரிசல்
இல்லை உன்னிடம் உரிமையில்
நான் நடந்துகொண்டதற்காகவா?
எதற்குமே கலங்காத நீ
எனக்காக ஏன் கலங்கினாய்?
உனக்கு பிடிக்காத யாரையும்
கோபித்து கொள்ளாத நீ
ஏன் என்னை கோபிக்கிறாய்?
எதுவுமே நடக்காதது போல்
நடிக்கிறாய் ஆனால்
என்னை கவனிக்கிறாய்,
ரசிக்கிறாய்,சுவைக்கிறாய்
நான் உணர்ந்துகொள்கிறேன்
ஆனால் மன்னிப்பும் பலமுறை
கேட்டுவிட்டேன்
மன்னித்து விட்டாயா?
இல்லை மரணிக்கசொன்னாயா?
எல்லாமே கேள்விகள் தானா?
என்று யோசிக்கிறாயா
எதுவுமே கேள்வி இல்லை
என் ஆதங்கம், என் உணர்வு
எழுத்துக்கள் கூட பேசுவதாய் உணர்கிறேன்
அதனால் எழுதுகிறேன்
உன்னுடன் வாழ்ந்த நாட்களில்
ஒரு யுகம் வாழ்ந்ததை உணர்கிறேன்
உன்னை குற்றவாளியாக்கி
என்னை நியாதிபதியாக்க
நான் விரும்பவில்லை
என்றும் உனக்காக காத்திருப்பேன்
ஆம் உன்னிடம் மட்டும் தானே
மன்னிப்பு கேட்டேன்
உன்னிடம் மட்டும் தானே
மன்னிப்பு கேட்கவும் முடிந்தது,முடிகிறது
உன்னிடம் மட்டும் தானே உரிமையாய்
நடந்து கொள்ள முடிந்தது,முடிகிறது
என்னை புரிந்து கொண்டாய்
ஆனால் ஏன் என்னை
தவிக்க வைக்கிறாய்
நான் உன்னை ரசிக்கிறேன்,
காதலிக்கிறேன், சுவைக்கிறேன்,
சிந்திக்கிறேன், நிந்திக்கிறேன்,
உன்னோடு வாழ்வதை உணர்கிறேன்,
ஆனாலும் துடிக்கிறேன்
கொலை குற்றவாளிக்குகூட
மன்னிப்பு உண்டு ஆனால்
உன் மனதை கொள்ளையடித்த
இந்த கொல்லை குற்றவாளிக்கு
மன்னிப்பு உண்டா?
உன் பதிலை, உன் மன்னிப்பை
உன் புரிதலை, உன் ஏற்றுக்கொள்ளலை,
உன் காதலை, உன் கோபத்தை,
உன் ஆதங்கத்தை, உன் உணர்வை,
உன் ஆசையை, உன் அன்பை,
உன் பாசத்தை, உன் நேசத்தை,
உன் நட்பை, உன் தோழமையை,
உன் எல்லாவற்றையும்,
நீ என்னோடு வாழும் வாழ்க்கையை
எதிபார்த்து காத்திருக்கிறேன்

அன்புடன்
நான்

வியாழன், 25 செப்டம்பர், 2008

என் அன்பே!

அன்புள்ளவளுக்கு அன்பில்லாத
படுபாவி நான் எழுதுவது
உன்னை வதைத்ததும்
காயப்படுத்தியதும்
உன்னை கட்டுப்படுத்த நினைத்ததும்
ஏன் தவறுகளே
மனசாட்சியின் பிடியில்
குற்றவாளி கூண்டில்
நின்றுகொண்டுதான் எழுதுகிறேன்
எத்தனையோ சோதனைகளை
கடந்து வந்த எனக்கு
உன்னுடன் தொடர்பு கொள்ளமுடியாதது
எனக்கு ஒரு மைல்கல்லாக அல்ல
என்னை முன்னோக்கி செல்ல விடாத
தடைகல்லாகதானிருக்கிறது
நான் உன்னை காதலித்ததை
சொல்லியிருக்கலாம்
ஏன் நீ என்னை விட்டு
அகன்று போவாயோ என்ற
கவலைதானடி என் அன்பே!
உன்னோடு சேர்ந்து
வாழ வேண்டுமென்று நினைத்ததும்
உன்னை சந்தோஷபடுத்த நினைத்ததும்
உன் வலிகளை என் வலிகளாக்க நினைத்ததும்
உன் காயத்திற்கு மருந்திட நினைத்ததும்
உனக்காக அழ நினைத்ததும்
என் தவறுகளா?
அழ வைத்திருக்கிறேன்
கோபபடவைத்திருக்கிறேன்
எல்லாமே உன்மேல் உரிமையில்
செய்திருக்கிறேன்
உன்னோடு பேசவேண்டும் என்று
நினைத்தபோதல்லாம் என்னை
பேசவைத்தாய் ஆனால்
ஏன் என்னை பேசாதே என்றாய்
இப்போது வாய் இருந்தும்
ஊமையாய் தவிக்கிறேன்
உன்னை போல் புன்னகைக்கவே
மனம் இப்போது விரும்புகிறது
தவறுவது மனித இயல்புதானே என் அன்பே!
அப்படி தவறியிருந்தால்
அந்த தவறை திருத்தவேண்டியதும்
உன் கடமை தானே என் அன்பே!
என்னுடைய எல்லா தவறுகளையும்
திருத்திய உனக்கு இதை ஏன்
திருத்திட மனம் வரவில்லையா என் அன்பே!
மிருகமாய் வாழ்ந்த என்னை
மனிதனாக்கினாய்
இப்போது கோபம் வரும்போதெல்லாம்
உன் ஞாபகமே வந்து
என்னை கட்டுபடுத்துகிறது
உன்னிடம் பேசிய நான்
இப்போதேல்லாம்
உன் புகைப்படம் பார்த்தே பேசுகிறேன்
உன்னை பார்க்காத போதெல்லாம்
உன் புகைபடத்தைதான் பார்க்கிறேன்
என்னை விட்டு நீ அகன்று போனாலும்
உன் நினைவுகளோடு தான் வாழ்ந்திடுவேன்
கடைசி மூச்சுகாற்றை வெளிவிடும் போதும்
உன்னை தான் நினைத்திருப்பேன்
என்னை மன்னிப்பாய் ஏற்பாய்
என்னும் ஏக்கத்துடன் காத்திருக்கிறேன்

அன்புடன்
நான்

சனி, 13 செப்டம்பர், 2008

ஏற்றுக் கொள்வாயா?

அன்பே தலைசாய்க்க நினைக்கிறேன்
தலைசாய்க்க முடியவில்லை
துயில் கொள்ள நினைக்கிறேன்
துயில் கொள்ள முடியவில்லை
தவறு என்னுடையது தான்
திருத்தி கொள்ள வேண்டியதும் நான்தான்
ஆனாலும் ஏற்றுகொள்ள முடியவில்லை
இவ்வளவு பெரிய தண்டனை
தேவையா எனக்கு?
சாந்தமாக சொன்னாய்
சாந்தமானேன்
கட்டுப்படுத்திட சொன்னாய்
கட்டுப்படுத்தினேன்
கோபம் கொண்டாய்
உணர்வாய் பழகினாய்
தவறுகளை திருத்தினாய்
எனக்கு கற்று கொடுத்தாய்
முடிவுகளை சொன்னாய்
எனக்கு தோள் கொடுத்தாய்
என்னை தாங்கினாய்
என் வலியை உன் வலியாக்கினாய்
உன் நட்பை, தோழமையை,
பாசத்தை, அன்பை எனக்களித்தாய்
என்னை மனிதனாக்கினாய்
ஆனாலும் தவறு என்னுடையதுதானே
உன் வலியை உன் காயத்தை
கேட்க்கவே இல்லை
உன்னை நான் பேசவே விடவில்லை
உனக்கு வலியை தந்தேன்
காயத்தை உருவாக்கினேன்
காயம் ஆறவில்லையா?
வலிகளும் தீரவில்லையா?
அதனால் தானா தொடர்பே கூடாது என்றாய்
உன் சிக்கல்களும் பிரச்சினைகளும்
எனக்கு புரிகிறது அது அத்தனையும்
நான் தாங்கி கொள்கிறேன்
உன் நட்பு தோழமை
பாசம் நேசம் மிக பெரிது
நீ என் மேல் கொண்டிருக்கும் பொய் கோபம்
என்னை கலங்கடிக்கிறது
சோர்வுறவைக்கிறது
திணறவைக்கிறது
திண்டாடவைக்கிறது
சோதிக்காதே
ஏனோ தனியாக கைப்பேசியில் பேசுகிறாய்
உணர்வோடு அழுகிறாய்
நான் பார்த்தால் மறைக்கிறாய்
ஏன் உனக்கு இவ்வளவு வலிகள்?
நான் தாங்கி கொள்கிறேன்
நான் உன்னை ஏற்று கொள்கிறேன்
நான் உன்னுடன் வாழ விரும்புகிறேன்
நீ ஏற்றுக்கொள்வாயா?

சனி, 6 செப்டம்பர், 2008

என்னவளே!

என் இனியவளே
எத்தனை பேருடன் பழகியிருக்கிறேன்
அத்தனை பேரிடமும் இல்லாத
ஓர் உணர்வு உன்னுடன்
ஆனாலும் வித்தியாசமானவள் நீ
உண்மையானவள் நீ
உணர்வுபூர்வமானவள் நீ
என்னுள் வியாபித்திருப்பவள் நீ
உன் கோபம் மற்றவர்களிடம் இருந்து
உன்னை காப்பாற்றும்
ஆனாலும் நீ என்மேல்
பொய்கோபம் கொண்டிருப்பது புரிகிறது
என்மேல் அப்படி என்ன கோபம் உனக்கு?
உண்மையை சொன்னதாலா
உணர்வோடு பழகியதாலா
ஏன் இந்த தண்டனை?
மற்றவர்கள் உன்னோடு பேசும்போது
நான்மட்டும் எப்படி ?
புரிந்தாலும் ஏன் ஏற்றுகொள்ள மறுக்கிறாய்?
அன்போடு என்னை அரவணைத்தாய்
பாசமாய் என்னோடு பழகினாய்
உரிமையாய் என்மேல் கோபம் கொண்டாய்
உணர்வுபூர்வமாய் என்னை ஆதரித்தாய்
உரிமையாய் என்னை கண்டித்தாய்

என்னுடைய வலிகளையும் தாங்கினாய்
ஆனாலும் எனக்கு ஏன் இந்த தண்டனை?
உதவிகளை கூட திருப்பி அனுப்பினாய்
அதற்கு விலையும் நிர்ணயித்தாய்
சொல்ல நினைக்கிறாய் மறுக்கிறது மனசு
மெல்லவும் முடியாமல் துப்பவும் முடியாமல்
ஏன் இவ்வளவு வலிகள் உனக்கு?
நான் செய்த தவறு தான்
உன்னை அதிகம் பேசவிடாததும்
நான் மட்டுமே அதிகம் பேசியதும்
என்னை வெறுக்க மறுக்கிறாய்
ஆனாலும் வெறுப்பதாய் நடிக்கிறாய்
நீ கொடுத்த விலை தான் அதிகம்
ஆனாலும் தவறு என்னுடையது தான்
மீதி எல்லாவற்றிலும் உண்மையை சொன்னேன்
உன்னோடு கொண்டிருந்த உறவை
மட்டும் மறைத்தே பேசினேன்
அதற்கு விதண்டாவாதமும் பேசினேன்
ஆம் உன்னை காதலித்தேன்
காதலிக்கிறேன் காதலிப்பேன்
என்னை நல்லவன் என்றாய்
உன்னை அன்பானவள் இல்லை என்றாய்
ஏன் உன்னை குற்றவாளி ஆக்கினாய்?
என்மேல் அப்படி என்ன கோபம் உனக்கு?
சொல்லிவிடு மன்னித்துவிடு
தண்டித்துவிடு துண்டித்துவிடாதே என்னவளே!

புதன், 3 செப்டம்பர், 2008

புரியவில்லை!

பிரியமானவளே!
நான் அமுதமல்ல
விஷமுமல்ல
அள்ளி பருகிட அமுதமல்ல
தொட்டு சுவைத்திட விஷமுமல்ல
இரண்டுக்கும் இடையில் நான்
கொஞ்சம் அமுதம் கொஞ்சம் விஷம்
கலந்த கலவை நான்
ஆனால் நீயோ என்னை
அமுதம் என்றாய் அமுதமும் ஆக்கினாய்
நானும் இல்லை என்று சொல்லவில்லை
அள்ளினாய், பருகினாய், சுவைத்தாய், ரசித்தாய்
திகட்டியதோ!
புரியவில்லை!
இப்போது விஷம் என்கிறாயா?
புரியவில்லை!
இன்னும் நீ சொல்லவும் இல்லை
ஆனால் அமுதம் தான் என்கிறாய் போலும்
அள்ளி பருகிட மறுக்கிறாய்
ஆனால் ரசிக்கிறாய் சுவைக்கிறாய்
புரியவில்லை எனக்கு இன்னும்
ஆனால் நானோ இன்னும்
உன்னை அமுதம் என்கிறேன்
அள்ளிடுவேன், பருகிடுவேன்,
சுவைத்திடுவேன், ரசித்திடுவேன்
தொடர்வேன்
உன்னில் என்னை கண்டேன்

உணர்ந்தேன்
என்னில் உன்னை கண்டேன்
உணர்ந்தேன்
உன்னில் என்னை தொலைத்தேன்
தொலைப்பேன், தொடர்வேன்

ஆனாலும் புரியவில்லை எனக்கு இன்னும்...

ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2008

அன்பானவளே!

அன்பானவளே
என் மேல் உனக்கென்ன கோபம்
என்னை மன்னித்து விடு
இல்லை மரணிக்க விடு
மனிதனாய் மாற்றினாய்
என்னை நேசித்தாய் வலிகளை தாங்கினாய்
நான் அழுவதற்கு பதில் நீ அழுதாய்
எனக்காக கோபபட்டாய் என் மேல் உரிமை எடுத்தாய்
ஆனால் உன்னை மறக்க சொன்னாய்
ஏன் எனறு சொல்லி விடு
இல்லை என்னை மன்னித்து விடு
இல்லை மரணிக்க விடு