ஞாயிறு, 7 டிசம்பர், 2008

வெற்றியுடன் வாழ வாழ்த்துகிறேன்

எது சிறுபிள்ளைத்தனம்
முடிந்ததுபோல் தோன்றும் உறவுக்கு
முற்றுப்புள்ளி வைப்பதா?
இல்லை திரும்ப தொடங்க
நினைக்கும் உறவுக்கு
கால்புள்ளி வைப்பதா?
இல்லையே!
உன்னோடு இருந்த உறவுக்கு
பெயர் என்னவென்று வைத்தாய்
உன் உணர்வுகளை
புரிந்துகொள்ளாதவனல்ல நான்
உன்னை வெறுத்து ஒதுக்குபவனுமல்ல நான்
ஆனாலும் உன் அத்தனை செயல்பாடுகளும்
எனக்கு கேள்விக்குறியாய் தான்
கீழ்த்தரமான என் செயல்பாடுகளையும்
ஏற்று கொண்டவளல்லவா நீ
உன் பார்வையில் ஆயிரமாயிரம்
எண்ணங்கள் துடிப்புகள்
அத்தனையும் புரிந்துகொண்டவன் நான்
என்அன்பு, என்பாசம், என்நேசம்,
என்நட்பு, என்தோழமை, என்பரிவு
அத்தனையும் உன்னை
சுற்றியிருக்கும் எப்போதும்
தோல்விகளும் சறுக்கல்களும்
வாழ்க்கையின் படிக்கட்டுகள்
புரிந்துகொள்ளாதவல்ல நீ
தெரிந்துகொள்ளாதவளுமல்ல நீ
துவண்டு போகாதே எழு
வீறுகொண்டு எழு
துடிப்புடன் எழு
இடிமுழக்கத்துடன் எழு
உன்னை எதிர்ப்பவர்களை
எதிர்த்து நில் வெற்றி உனக்கே
உணர்வுகளை பகிர்ந்துகொள்
மகிழ்ச்சயுடன் வாழ்
மலரட்டும் நல்வாழ்க்கை
வெற்றியுடன் வாழ வாழ்த்துகிறேன்

புரியாத புதிராய்!

இங்கு விசமாகிபோகும்
மனிதர்களும் உண்டு
உணர்வுகளை புரிந்துகொள்ளாத
மனிதர்களும் உண்டு
உடுத்தியிருக்கும் உடையின்
உள்ளிருக்கும் பாகத்தை பார்க்க
துடிப்பவர்களும் உண்டு
சக மனிதனை தாக்கி அளிக்க
துடிப்பவர்களும் உண்டு
சக மனிதனின் உணர்வுகளை
கொச்சைபடுத்தும் மனிதர்களும் உண்டு
ஆறறிவு படைத்த மனிதனுக்குள்ளே
எத்தனை விதமான எண்ணங்கள்
ஐந்தறிவு படைத்த விலங்கினங்களுக்கு
இல்லாத அத்தனை குணமும் இங்கு
மனிதர்களுக்கு இருக்கிறது
அத்தனையும் வன்முறையா?
இல்லை குரூரமா?
புரியாத புதிராய்!

ஞாயிறு, 9 நவம்பர், 2008

ஏற்றுக்கொள்ளமுடியவில்லை

அன்பானவளே அறிவார்ந்தவளே
நன்றியுள்ளவளே நடுநாயகமானவளே
வலிகளும் வார்த்தைகளும்
சிலநேரங்களில் சுகமானது
அதே வலிகளும், வார்த்தைகளும்
சிலநேரங்களில் வலிமையானது,
கொடுரமானது, அர்த்தமானது,
எனக்கிருக்கும் வலியும்
இதே ரகங்கள் தான்
என்றாலும் என்னால்
ஏற்றுக்கொள்ளமுடியவில்லை
இந்த வலிகளின் காரணம்
புரிதல் இல்லையா
புரியவில்லை என்றாலும்
நீ சொன்ன காரணம்
என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை
என்னுள் எளும் எந்த கேள்விகளுக்கும்
உன்னால் தான் பதில் சொல்ல முடியும்
ஆனால் நான் உன்னிடம்
எந்த கேள்வியும் எழுப்பபோவதில்லை
உன்னோடு பேசிய கணங்களையும்
பேசிய பேச்சுகளையும்
அசைபோட்டு பார்க்கிறேன்
எத்தனை வலிகள், தேவையில்லாத பேச்சுகள்
நீ வலிகளுடன் சிரித்த சிரிப்புகள்
எனக்காக உருவாக்கிய கணங்கள்,
உற்சாகங்கள், தவிப்புகள்,
உதவிகள், உழைப்புகள்
சில பிரிவுகள் தவிர்க்கமுடியாதது
தனித்துவமானது அழகானது,
அறிவானது, அன்பானது, பண்பானது
ஆனால் உன் பிரிவு தவிக்கவைக்கிறது
ஏன் என்னை விட்டு பிரிந்தாய்
உன் பிரிவை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை
உன் முடிவு நல்ல முடிவு தான்
ஆனால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை
தவறுகளும், தவறுதல்களும்
இயல்பானதே என்னுடைய
தவறுகளும், தவறுதல்களும்
இயல்பானது தானே
உன் இடத்தில் இன்னொரு மனிதனை
நியமிக்க முடியவில்லை
ஏனென்றால் ஒப்பந்த கூலிகாரனல்ல நீ
உணர்வுபூர்வமான உறவு நீ
உன்னுடைய இடம் வெற்றிடமாகவே இருக்கும்
உன் வாழ்க்கை வெற்றிகரமாகவே இருக்கட்டும்.

அன்புடன்,
நான்.

புதன், 8 அக்டோபர், 2008

உனக்காக காத்திருக்கிறேன்

உனக்கும் எனக்குமான
உறவில் விரிசல்
தவிக்கிறேன், தவிக்கிறாய்
ஏன் என்பதன் காரணம்
சொல்ல மறுக்கிறாய்
தவிக்கவைக்கிறாய்
தொடர்பு கொள்ள கூடாது என்றாய்
நானும் நீயும் வாழ்ந்ததும்
வாழ்வதும் திரைப்படம் இல்லை
உண்மையான வாழ்க்கைதானே?
உன்னிடம் என் காதலை சொல்ல
நேரம் தவறியிருக்கலாம்
அதற்காகவா இந்த விரிசல்
இல்லை உன்னிடம் உரிமையில்
நான் நடந்துகொண்டதற்காகவா?
எதற்குமே கலங்காத நீ
எனக்காக ஏன் கலங்கினாய்?
உனக்கு பிடிக்காத யாரையும்
கோபித்து கொள்ளாத நீ
ஏன் என்னை கோபிக்கிறாய்?
எதுவுமே நடக்காதது போல்
நடிக்கிறாய் ஆனால்
என்னை கவனிக்கிறாய்,
ரசிக்கிறாய்,சுவைக்கிறாய்
நான் உணர்ந்துகொள்கிறேன்
ஆனால் மன்னிப்பும் பலமுறை
கேட்டுவிட்டேன்
மன்னித்து விட்டாயா?
இல்லை மரணிக்கசொன்னாயா?
எல்லாமே கேள்விகள் தானா?
என்று யோசிக்கிறாயா
எதுவுமே கேள்வி இல்லை
என் ஆதங்கம், என் உணர்வு
எழுத்துக்கள் கூட பேசுவதாய் உணர்கிறேன்
அதனால் எழுதுகிறேன்
உன்னுடன் வாழ்ந்த நாட்களில்
ஒரு யுகம் வாழ்ந்ததை உணர்கிறேன்
உன்னை குற்றவாளியாக்கி
என்னை நியாதிபதியாக்க
நான் விரும்பவில்லை
என்றும் உனக்காக காத்திருப்பேன்
ஆம் உன்னிடம் மட்டும் தானே
மன்னிப்பு கேட்டேன்
உன்னிடம் மட்டும் தானே
மன்னிப்பு கேட்கவும் முடிந்தது,முடிகிறது
உன்னிடம் மட்டும் தானே உரிமையாய்
நடந்து கொள்ள முடிந்தது,முடிகிறது
என்னை புரிந்து கொண்டாய்
ஆனால் ஏன் என்னை
தவிக்க வைக்கிறாய்
நான் உன்னை ரசிக்கிறேன்,
காதலிக்கிறேன், சுவைக்கிறேன்,
சிந்திக்கிறேன், நிந்திக்கிறேன்,
உன்னோடு வாழ்வதை உணர்கிறேன்,
ஆனாலும் துடிக்கிறேன்
கொலை குற்றவாளிக்குகூட
மன்னிப்பு உண்டு ஆனால்
உன் மனதை கொள்ளையடித்த
இந்த கொல்லை குற்றவாளிக்கு
மன்னிப்பு உண்டா?
உன் பதிலை, உன் மன்னிப்பை
உன் புரிதலை, உன் ஏற்றுக்கொள்ளலை,
உன் காதலை, உன் கோபத்தை,
உன் ஆதங்கத்தை, உன் உணர்வை,
உன் ஆசையை, உன் அன்பை,
உன் பாசத்தை, உன் நேசத்தை,
உன் நட்பை, உன் தோழமையை,
உன் எல்லாவற்றையும்,
நீ என்னோடு வாழும் வாழ்க்கையை
எதிபார்த்து காத்திருக்கிறேன்

அன்புடன்
நான்

வியாழன், 25 செப்டம்பர், 2008

என் அன்பே!

அன்புள்ளவளுக்கு அன்பில்லாத
படுபாவி நான் எழுதுவது
உன்னை வதைத்ததும்
காயப்படுத்தியதும்
உன்னை கட்டுப்படுத்த நினைத்ததும்
ஏன் தவறுகளே
மனசாட்சியின் பிடியில்
குற்றவாளி கூண்டில்
நின்றுகொண்டுதான் எழுதுகிறேன்
எத்தனையோ சோதனைகளை
கடந்து வந்த எனக்கு
உன்னுடன் தொடர்பு கொள்ளமுடியாதது
எனக்கு ஒரு மைல்கல்லாக அல்ல
என்னை முன்னோக்கி செல்ல விடாத
தடைகல்லாகதானிருக்கிறது
நான் உன்னை காதலித்ததை
சொல்லியிருக்கலாம்
ஏன் நீ என்னை விட்டு
அகன்று போவாயோ என்ற
கவலைதானடி என் அன்பே!
உன்னோடு சேர்ந்து
வாழ வேண்டுமென்று நினைத்ததும்
உன்னை சந்தோஷபடுத்த நினைத்ததும்
உன் வலிகளை என் வலிகளாக்க நினைத்ததும்
உன் காயத்திற்கு மருந்திட நினைத்ததும்
உனக்காக அழ நினைத்ததும்
என் தவறுகளா?
அழ வைத்திருக்கிறேன்
கோபபடவைத்திருக்கிறேன்
எல்லாமே உன்மேல் உரிமையில்
செய்திருக்கிறேன்
உன்னோடு பேசவேண்டும் என்று
நினைத்தபோதல்லாம் என்னை
பேசவைத்தாய் ஆனால்
ஏன் என்னை பேசாதே என்றாய்
இப்போது வாய் இருந்தும்
ஊமையாய் தவிக்கிறேன்
உன்னை போல் புன்னகைக்கவே
மனம் இப்போது விரும்புகிறது
தவறுவது மனித இயல்புதானே என் அன்பே!
அப்படி தவறியிருந்தால்
அந்த தவறை திருத்தவேண்டியதும்
உன் கடமை தானே என் அன்பே!
என்னுடைய எல்லா தவறுகளையும்
திருத்திய உனக்கு இதை ஏன்
திருத்திட மனம் வரவில்லையா என் அன்பே!
மிருகமாய் வாழ்ந்த என்னை
மனிதனாக்கினாய்
இப்போது கோபம் வரும்போதெல்லாம்
உன் ஞாபகமே வந்து
என்னை கட்டுபடுத்துகிறது
உன்னிடம் பேசிய நான்
இப்போதேல்லாம்
உன் புகைப்படம் பார்த்தே பேசுகிறேன்
உன்னை பார்க்காத போதெல்லாம்
உன் புகைபடத்தைதான் பார்க்கிறேன்
என்னை விட்டு நீ அகன்று போனாலும்
உன் நினைவுகளோடு தான் வாழ்ந்திடுவேன்
கடைசி மூச்சுகாற்றை வெளிவிடும் போதும்
உன்னை தான் நினைத்திருப்பேன்
என்னை மன்னிப்பாய் ஏற்பாய்
என்னும் ஏக்கத்துடன் காத்திருக்கிறேன்

அன்புடன்
நான்

சனி, 13 செப்டம்பர், 2008

ஏற்றுக் கொள்வாயா?

அன்பே தலைசாய்க்க நினைக்கிறேன்
தலைசாய்க்க முடியவில்லை
துயில் கொள்ள நினைக்கிறேன்
துயில் கொள்ள முடியவில்லை
தவறு என்னுடையது தான்
திருத்தி கொள்ள வேண்டியதும் நான்தான்
ஆனாலும் ஏற்றுகொள்ள முடியவில்லை
இவ்வளவு பெரிய தண்டனை
தேவையா எனக்கு?
சாந்தமாக சொன்னாய்
சாந்தமானேன்
கட்டுப்படுத்திட சொன்னாய்
கட்டுப்படுத்தினேன்
கோபம் கொண்டாய்
உணர்வாய் பழகினாய்
தவறுகளை திருத்தினாய்
எனக்கு கற்று கொடுத்தாய்
முடிவுகளை சொன்னாய்
எனக்கு தோள் கொடுத்தாய்
என்னை தாங்கினாய்
என் வலியை உன் வலியாக்கினாய்
உன் நட்பை, தோழமையை,
பாசத்தை, அன்பை எனக்களித்தாய்
என்னை மனிதனாக்கினாய்
ஆனாலும் தவறு என்னுடையதுதானே
உன் வலியை உன் காயத்தை
கேட்க்கவே இல்லை
உன்னை நான் பேசவே விடவில்லை
உனக்கு வலியை தந்தேன்
காயத்தை உருவாக்கினேன்
காயம் ஆறவில்லையா?
வலிகளும் தீரவில்லையா?
அதனால் தானா தொடர்பே கூடாது என்றாய்
உன் சிக்கல்களும் பிரச்சினைகளும்
எனக்கு புரிகிறது அது அத்தனையும்
நான் தாங்கி கொள்கிறேன்
உன் நட்பு தோழமை
பாசம் நேசம் மிக பெரிது
நீ என் மேல் கொண்டிருக்கும் பொய் கோபம்
என்னை கலங்கடிக்கிறது
சோர்வுறவைக்கிறது
திணறவைக்கிறது
திண்டாடவைக்கிறது
சோதிக்காதே
ஏனோ தனியாக கைப்பேசியில் பேசுகிறாய்
உணர்வோடு அழுகிறாய்
நான் பார்த்தால் மறைக்கிறாய்
ஏன் உனக்கு இவ்வளவு வலிகள்?
நான் தாங்கி கொள்கிறேன்
நான் உன்னை ஏற்று கொள்கிறேன்
நான் உன்னுடன் வாழ விரும்புகிறேன்
நீ ஏற்றுக்கொள்வாயா?

சனி, 6 செப்டம்பர், 2008

என்னவளே!

என் இனியவளே
எத்தனை பேருடன் பழகியிருக்கிறேன்
அத்தனை பேரிடமும் இல்லாத
ஓர் உணர்வு உன்னுடன்
ஆனாலும் வித்தியாசமானவள் நீ
உண்மையானவள் நீ
உணர்வுபூர்வமானவள் நீ
என்னுள் வியாபித்திருப்பவள் நீ
உன் கோபம் மற்றவர்களிடம் இருந்து
உன்னை காப்பாற்றும்
ஆனாலும் நீ என்மேல்
பொய்கோபம் கொண்டிருப்பது புரிகிறது
என்மேல் அப்படி என்ன கோபம் உனக்கு?
உண்மையை சொன்னதாலா
உணர்வோடு பழகியதாலா
ஏன் இந்த தண்டனை?
மற்றவர்கள் உன்னோடு பேசும்போது
நான்மட்டும் எப்படி ?
புரிந்தாலும் ஏன் ஏற்றுகொள்ள மறுக்கிறாய்?
அன்போடு என்னை அரவணைத்தாய்
பாசமாய் என்னோடு பழகினாய்
உரிமையாய் என்மேல் கோபம் கொண்டாய்
உணர்வுபூர்வமாய் என்னை ஆதரித்தாய்
உரிமையாய் என்னை கண்டித்தாய்

என்னுடைய வலிகளையும் தாங்கினாய்
ஆனாலும் எனக்கு ஏன் இந்த தண்டனை?
உதவிகளை கூட திருப்பி அனுப்பினாய்
அதற்கு விலையும் நிர்ணயித்தாய்
சொல்ல நினைக்கிறாய் மறுக்கிறது மனசு
மெல்லவும் முடியாமல் துப்பவும் முடியாமல்
ஏன் இவ்வளவு வலிகள் உனக்கு?
நான் செய்த தவறு தான்
உன்னை அதிகம் பேசவிடாததும்
நான் மட்டுமே அதிகம் பேசியதும்
என்னை வெறுக்க மறுக்கிறாய்
ஆனாலும் வெறுப்பதாய் நடிக்கிறாய்
நீ கொடுத்த விலை தான் அதிகம்
ஆனாலும் தவறு என்னுடையது தான்
மீதி எல்லாவற்றிலும் உண்மையை சொன்னேன்
உன்னோடு கொண்டிருந்த உறவை
மட்டும் மறைத்தே பேசினேன்
அதற்கு விதண்டாவாதமும் பேசினேன்
ஆம் உன்னை காதலித்தேன்
காதலிக்கிறேன் காதலிப்பேன்
என்னை நல்லவன் என்றாய்
உன்னை அன்பானவள் இல்லை என்றாய்
ஏன் உன்னை குற்றவாளி ஆக்கினாய்?
என்மேல் அப்படி என்ன கோபம் உனக்கு?
சொல்லிவிடு மன்னித்துவிடு
தண்டித்துவிடு துண்டித்துவிடாதே என்னவளே!

புதன், 3 செப்டம்பர், 2008

புரியவில்லை!

பிரியமானவளே!
நான் அமுதமல்ல
விஷமுமல்ல
அள்ளி பருகிட அமுதமல்ல
தொட்டு சுவைத்திட விஷமுமல்ல
இரண்டுக்கும் இடையில் நான்
கொஞ்சம் அமுதம் கொஞ்சம் விஷம்
கலந்த கலவை நான்
ஆனால் நீயோ என்னை
அமுதம் என்றாய் அமுதமும் ஆக்கினாய்
நானும் இல்லை என்று சொல்லவில்லை
அள்ளினாய், பருகினாய், சுவைத்தாய், ரசித்தாய்
திகட்டியதோ!
புரியவில்லை!
இப்போது விஷம் என்கிறாயா?
புரியவில்லை!
இன்னும் நீ சொல்லவும் இல்லை
ஆனால் அமுதம் தான் என்கிறாய் போலும்
அள்ளி பருகிட மறுக்கிறாய்
ஆனால் ரசிக்கிறாய் சுவைக்கிறாய்
புரியவில்லை எனக்கு இன்னும்
ஆனால் நானோ இன்னும்
உன்னை அமுதம் என்கிறேன்
அள்ளிடுவேன், பருகிடுவேன்,
சுவைத்திடுவேன், ரசித்திடுவேன்
தொடர்வேன்
உன்னில் என்னை கண்டேன்

உணர்ந்தேன்
என்னில் உன்னை கண்டேன்
உணர்ந்தேன்
உன்னில் என்னை தொலைத்தேன்
தொலைப்பேன், தொடர்வேன்

ஆனாலும் புரியவில்லை எனக்கு இன்னும்...

ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2008

அன்பானவளே!

அன்பானவளே
என் மேல் உனக்கென்ன கோபம்
என்னை மன்னித்து விடு
இல்லை மரணிக்க விடு
மனிதனாய் மாற்றினாய்
என்னை நேசித்தாய் வலிகளை தாங்கினாய்
நான் அழுவதற்கு பதில் நீ அழுதாய்
எனக்காக கோபபட்டாய் என் மேல் உரிமை எடுத்தாய்
ஆனால் உன்னை மறக்க சொன்னாய்
ஏன் எனறு சொல்லி விடு
இல்லை என்னை மன்னித்து விடு
இல்லை மரணிக்க விடு