சனி, 6 செப்டம்பர், 2008

என்னவளே!

என் இனியவளே
எத்தனை பேருடன் பழகியிருக்கிறேன்
அத்தனை பேரிடமும் இல்லாத
ஓர் உணர்வு உன்னுடன்
ஆனாலும் வித்தியாசமானவள் நீ
உண்மையானவள் நீ
உணர்வுபூர்வமானவள் நீ
என்னுள் வியாபித்திருப்பவள் நீ
உன் கோபம் மற்றவர்களிடம் இருந்து
உன்னை காப்பாற்றும்
ஆனாலும் நீ என்மேல்
பொய்கோபம் கொண்டிருப்பது புரிகிறது
என்மேல் அப்படி என்ன கோபம் உனக்கு?
உண்மையை சொன்னதாலா
உணர்வோடு பழகியதாலா
ஏன் இந்த தண்டனை?
மற்றவர்கள் உன்னோடு பேசும்போது
நான்மட்டும் எப்படி ?
புரிந்தாலும் ஏன் ஏற்றுகொள்ள மறுக்கிறாய்?
அன்போடு என்னை அரவணைத்தாய்
பாசமாய் என்னோடு பழகினாய்
உரிமையாய் என்மேல் கோபம் கொண்டாய்
உணர்வுபூர்வமாய் என்னை ஆதரித்தாய்
உரிமையாய் என்னை கண்டித்தாய்

என்னுடைய வலிகளையும் தாங்கினாய்
ஆனாலும் எனக்கு ஏன் இந்த தண்டனை?
உதவிகளை கூட திருப்பி அனுப்பினாய்
அதற்கு விலையும் நிர்ணயித்தாய்
சொல்ல நினைக்கிறாய் மறுக்கிறது மனசு
மெல்லவும் முடியாமல் துப்பவும் முடியாமல்
ஏன் இவ்வளவு வலிகள் உனக்கு?
நான் செய்த தவறு தான்
உன்னை அதிகம் பேசவிடாததும்
நான் மட்டுமே அதிகம் பேசியதும்
என்னை வெறுக்க மறுக்கிறாய்
ஆனாலும் வெறுப்பதாய் நடிக்கிறாய்
நீ கொடுத்த விலை தான் அதிகம்
ஆனாலும் தவறு என்னுடையது தான்
மீதி எல்லாவற்றிலும் உண்மையை சொன்னேன்
உன்னோடு கொண்டிருந்த உறவை
மட்டும் மறைத்தே பேசினேன்
அதற்கு விதண்டாவாதமும் பேசினேன்
ஆம் உன்னை காதலித்தேன்
காதலிக்கிறேன் காதலிப்பேன்
என்னை நல்லவன் என்றாய்
உன்னை அன்பானவள் இல்லை என்றாய்
ஏன் உன்னை குற்றவாளி ஆக்கினாய்?
என்மேல் அப்படி என்ன கோபம் உனக்கு?
சொல்லிவிடு மன்னித்துவிடு
தண்டித்துவிடு துண்டித்துவிடாதே என்னவளே!

புதன், 3 செப்டம்பர், 2008

புரியவில்லை!

பிரியமானவளே!
நான் அமுதமல்ல
விஷமுமல்ல
அள்ளி பருகிட அமுதமல்ல
தொட்டு சுவைத்திட விஷமுமல்ல
இரண்டுக்கும் இடையில் நான்
கொஞ்சம் அமுதம் கொஞ்சம் விஷம்
கலந்த கலவை நான்
ஆனால் நீயோ என்னை
அமுதம் என்றாய் அமுதமும் ஆக்கினாய்
நானும் இல்லை என்று சொல்லவில்லை
அள்ளினாய், பருகினாய், சுவைத்தாய், ரசித்தாய்
திகட்டியதோ!
புரியவில்லை!
இப்போது விஷம் என்கிறாயா?
புரியவில்லை!
இன்னும் நீ சொல்லவும் இல்லை
ஆனால் அமுதம் தான் என்கிறாய் போலும்
அள்ளி பருகிட மறுக்கிறாய்
ஆனால் ரசிக்கிறாய் சுவைக்கிறாய்
புரியவில்லை எனக்கு இன்னும்
ஆனால் நானோ இன்னும்
உன்னை அமுதம் என்கிறேன்
அள்ளிடுவேன், பருகிடுவேன்,
சுவைத்திடுவேன், ரசித்திடுவேன்
தொடர்வேன்
உன்னில் என்னை கண்டேன்

உணர்ந்தேன்
என்னில் உன்னை கண்டேன்
உணர்ந்தேன்
உன்னில் என்னை தொலைத்தேன்
தொலைப்பேன், தொடர்வேன்

ஆனாலும் புரியவில்லை எனக்கு இன்னும்...

ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2008

அன்பானவளே!

அன்பானவளே
என் மேல் உனக்கென்ன கோபம்
என்னை மன்னித்து விடு
இல்லை மரணிக்க விடு
மனிதனாய் மாற்றினாய்
என்னை நேசித்தாய் வலிகளை தாங்கினாய்
நான் அழுவதற்கு பதில் நீ அழுதாய்
எனக்காக கோபபட்டாய் என் மேல் உரிமை எடுத்தாய்
ஆனால் உன்னை மறக்க சொன்னாய்
ஏன் எனறு சொல்லி விடு
இல்லை என்னை மன்னித்து விடு
இல்லை மரணிக்க விடு