வியாழன், 25 செப்டம்பர், 2008

என் அன்பே!

அன்புள்ளவளுக்கு அன்பில்லாத
படுபாவி நான் எழுதுவது
உன்னை வதைத்ததும்
காயப்படுத்தியதும்
உன்னை கட்டுப்படுத்த நினைத்ததும்
ஏன் தவறுகளே
மனசாட்சியின் பிடியில்
குற்றவாளி கூண்டில்
நின்றுகொண்டுதான் எழுதுகிறேன்
எத்தனையோ சோதனைகளை
கடந்து வந்த எனக்கு
உன்னுடன் தொடர்பு கொள்ளமுடியாதது
எனக்கு ஒரு மைல்கல்லாக அல்ல
என்னை முன்னோக்கி செல்ல விடாத
தடைகல்லாகதானிருக்கிறது
நான் உன்னை காதலித்ததை
சொல்லியிருக்கலாம்
ஏன் நீ என்னை விட்டு
அகன்று போவாயோ என்ற
கவலைதானடி என் அன்பே!
உன்னோடு சேர்ந்து
வாழ வேண்டுமென்று நினைத்ததும்
உன்னை சந்தோஷபடுத்த நினைத்ததும்
உன் வலிகளை என் வலிகளாக்க நினைத்ததும்
உன் காயத்திற்கு மருந்திட நினைத்ததும்
உனக்காக அழ நினைத்ததும்
என் தவறுகளா?
அழ வைத்திருக்கிறேன்
கோபபடவைத்திருக்கிறேன்
எல்லாமே உன்மேல் உரிமையில்
செய்திருக்கிறேன்
உன்னோடு பேசவேண்டும் என்று
நினைத்தபோதல்லாம் என்னை
பேசவைத்தாய் ஆனால்
ஏன் என்னை பேசாதே என்றாய்
இப்போது வாய் இருந்தும்
ஊமையாய் தவிக்கிறேன்
உன்னை போல் புன்னகைக்கவே
மனம் இப்போது விரும்புகிறது
தவறுவது மனித இயல்புதானே என் அன்பே!
அப்படி தவறியிருந்தால்
அந்த தவறை திருத்தவேண்டியதும்
உன் கடமை தானே என் அன்பே!
என்னுடைய எல்லா தவறுகளையும்
திருத்திய உனக்கு இதை ஏன்
திருத்திட மனம் வரவில்லையா என் அன்பே!
மிருகமாய் வாழ்ந்த என்னை
மனிதனாக்கினாய்
இப்போது கோபம் வரும்போதெல்லாம்
உன் ஞாபகமே வந்து
என்னை கட்டுபடுத்துகிறது
உன்னிடம் பேசிய நான்
இப்போதேல்லாம்
உன் புகைப்படம் பார்த்தே பேசுகிறேன்
உன்னை பார்க்காத போதெல்லாம்
உன் புகைபடத்தைதான் பார்க்கிறேன்
என்னை விட்டு நீ அகன்று போனாலும்
உன் நினைவுகளோடு தான் வாழ்ந்திடுவேன்
கடைசி மூச்சுகாற்றை வெளிவிடும் போதும்
உன்னை தான் நினைத்திருப்பேன்
என்னை மன்னிப்பாய் ஏற்பாய்
என்னும் ஏக்கத்துடன் காத்திருக்கிறேன்

அன்புடன்
நான்

2 கருத்துகள்:

தாரணி பிரியா சொன்னது…

வரிகள் ரொம்ப நல்லாயிருக்குங்க . படிச்ச முடிச்சு பிறகும் அந்தவரிகளும் அதோட கனமும் மனசு நிறைய உக்காந்து இருக்கு. இது கற்பனையான கவிதை வரிகளா இருந்தாலும் சரி நிஜமான மன்னிப்பு கேட்டலுக்கான வரிகளா இருந்தாலும் சரி அந்த பொண்ணு மன்னிச்சுடணுமுமே மனசு நிறைய ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்திட்டிங்க‌

நான் சொன்னது…

நன்றி தாரணி பிரியா அவர்களே
எழுத்துகளும் உண்மைதான், வாழ்க்கையும் உண்மைதான்