ஞாயிறு, 9 நவம்பர், 2008

ஏற்றுக்கொள்ளமுடியவில்லை

அன்பானவளே அறிவார்ந்தவளே
நன்றியுள்ளவளே நடுநாயகமானவளே
வலிகளும் வார்த்தைகளும்
சிலநேரங்களில் சுகமானது
அதே வலிகளும், வார்த்தைகளும்
சிலநேரங்களில் வலிமையானது,
கொடுரமானது, அர்த்தமானது,
எனக்கிருக்கும் வலியும்
இதே ரகங்கள் தான்
என்றாலும் என்னால்
ஏற்றுக்கொள்ளமுடியவில்லை
இந்த வலிகளின் காரணம்
புரிதல் இல்லையா
புரியவில்லை என்றாலும்
நீ சொன்ன காரணம்
என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை
என்னுள் எளும் எந்த கேள்விகளுக்கும்
உன்னால் தான் பதில் சொல்ல முடியும்
ஆனால் நான் உன்னிடம்
எந்த கேள்வியும் எழுப்பபோவதில்லை
உன்னோடு பேசிய கணங்களையும்
பேசிய பேச்சுகளையும்
அசைபோட்டு பார்க்கிறேன்
எத்தனை வலிகள், தேவையில்லாத பேச்சுகள்
நீ வலிகளுடன் சிரித்த சிரிப்புகள்
எனக்காக உருவாக்கிய கணங்கள்,
உற்சாகங்கள், தவிப்புகள்,
உதவிகள், உழைப்புகள்
சில பிரிவுகள் தவிர்க்கமுடியாதது
தனித்துவமானது அழகானது,
அறிவானது, அன்பானது, பண்பானது
ஆனால் உன் பிரிவு தவிக்கவைக்கிறது
ஏன் என்னை விட்டு பிரிந்தாய்
உன் பிரிவை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை
உன் முடிவு நல்ல முடிவு தான்
ஆனால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை
தவறுகளும், தவறுதல்களும்
இயல்பானதே என்னுடைய
தவறுகளும், தவறுதல்களும்
இயல்பானது தானே
உன் இடத்தில் இன்னொரு மனிதனை
நியமிக்க முடியவில்லை
ஏனென்றால் ஒப்பந்த கூலிகாரனல்ல நீ
உணர்வுபூர்வமான உறவு நீ
உன்னுடைய இடம் வெற்றிடமாகவே இருக்கும்
உன் வாழ்க்கை வெற்றிகரமாகவே இருக்கட்டும்.

அன்புடன்,
நான்.

2 கருத்துகள்:

Unknown சொன்னது…

நல்ல கவிதை .வழக்கமான பிரிவு கணங்கள் பற்றி.
ஆண் எழுதும் பெண்ணை பற்றிய கவிதை என்று தெரிகிறது.
அனால் "இன்னொரு மனிதனை" "கூலிகாரனல்ல"
குழப்பம். ஏன்?

ஒரு தாழ்மையான வேண்டுகோள் . ரொம்ப நீளமாக
எழுதாதீர்கள் . வாசகன் வார்த்தைகளில் சிக்குண்டு
கவிதை புரியாமல் போய்விடும் .

என் வலைக்கு வாருங்கள்
ஸ்பேம் மெயில்/மழை/ஹைகூ/காதல் கவிதைகள் அண்ட் சிறுகதை.
சாத்தலாம் / வாழ்த்தலாம். கருத்து கண்டிப்பாக சொல்லுங்கள்.
அன்புடன்
கே.ரவிஷங்கர்

நன்றி .

நான் சொன்னது…

நன்றி ரவிசங்கர் அவர்களே
தாழ்மையான என்ற வார்த்தை தேவைஇல்லை வேண்டுகோள் என்றே போதும்
அதில் ஒரு குழப்பமும் இல்லை, என்னுடைய பார்வையில் நியாயமான கருத்து தான்
ரொம்ப நீளமாக எழுதுவதை தவிர்க்க முயலுகிறேன்,
உங்கள் பதிவுகளை முன்னமே படித்திருக்கிறேன். ஆனால் நேரமில்லாமையால் கருத்து சொல்ல முடியவில்லை. நிச்சயமாக கருத்து சொல்லுகிறேன்
நன்றி